Gurugram Shocker: தீர்க்கதரிசியான பார்க்கிங் பட இயக்குனர்.. காரை நிறுத்திய நபர்.. "கார் உங்கள்து தம்பி.. ஆனா பார்க்கிங் என்னோடது" என கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்..!
பார்க்கிங் தகராறில் கார் நிறுத்தியவரை பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 16, குருகிராம் (Haryana News): பார்க்கிங் படத்தில் வரும் காட்சிகளைப் போல, காரில் லேசாக உரசியதால் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது காவல்நிலையம் வரை சென்று பெரிதாக வெடித்தள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் ரிசப் ஜசுஜா. இவர் நேற்று இரவு மணிமுடிந்து வந்த போது, பக்கத்து வீடு வாசலில் காரினை நிறுத்தியுள்ளார். இதனால் கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர் ரிசப் ஜசுஜா குடும்பத்தினர் அனைவரையும் தடியால் தாக்கியுள்ளார். Lok Sabha Elections 2024: முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை..!
பின்னர் அவரது ஹோண்டா கார் வைத்து ரிசப் ஜசுஜா மற்றும் அவரது சகோதரரை காரால் ஏற்றியுள்ளார். இதில் ரிசப் ஜசுஜா சம்பா இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.