நாளைய வானிலை: இன்று 12, நாளை 7 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! வானிலை நிலவரம் இதோ.!

Weather: தமிழகத்தில் இன்றும், நாளையும் பல மாநிலங்களில் கனமழை (Heavy Rain) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) தனது இன்றைய வானிலை (Today Weather) மற்றும் நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மழை நிலவரம் (Tamilnadu Rain Updates) குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளைய வானிலை: இன்று 12, நாளை 7 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! வானிலை நிலவரம் இதோ.!
Tomorrow weather (Photo Credit : LatestLY)

நவம்பர் 06, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 37.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தி மற்றும் தர்மபுரியில் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கையின்படி தமிழகத்தில் பரவலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. Gold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு.. சவரம் தங்கம் ரூ.90,000 க்கு விற்பனை.. வெள்ளி விலை நிலவரம் உள்ளே.! 

இன்றைய வானிலை (Today Weather):

இன்று (06-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை (07-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (08-11-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

இன்று (06-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (07-11-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).