Landslide Shocking Video: சீட்டுக்கட்டுகள் போல் சரிந்த கட்டிடம்; நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமாக பகீர் வீடியோ உள்ளே.!
மேகவெடிப்பு மழை, கடுமையான மின்னல் என இயற்கை பேரிடர்கள் ஹிமாச்சல பிரதேசத்தில் தொடருவதால் நிலத்தின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாகி, பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 24, குளு (Trending Video): இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் பருவமழையானது கொட்டித்தீர்த்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசம் (Himachal Pradesh Rains) போன்ற இமயமலை மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அவ்வப்போது மேகவெடிப்பு மழை, கடுமையான மின்னல் என இயற்கை பேரிடர்கள் அங்கு தொடருவதால் நிலத்தின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாகி, பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. JK Udampur Accident: பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து; 3 பேர் துள்ளத்துடிக்க பரிதாப பலி.!
இதனால் அம்மாநிலத்திற்குள் சுற்றுலா வாகனங்கள் சென்று வரவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் திரும்பவும் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள குளு (Kullu, Himachel Pradesh) பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விடீயோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வைத்த கட்டிடம் சீட்டுக்கட்டுபோல இடிந்து விழுந்தது பதிவாகியுள்ளது.