Ghazipur Accident: காஜிபூரில் பயங்கர விபத்து.. மின்கம்பியில் இடித்து பற்றி எரிந்த பேருந்து.. 6 பேர் பலி..!

உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பெரும் விபத்து ஏற்பட்டது.

Ghazipur Accident: காஜிபூரில் பயங்கர விபத்து.. மின்கம்பியில் இடித்து பற்றி எரிந்த பேருந்து.. 6 பேர் பலி..!
Ghazipur Accident (Photo Credit: @CricCrazyJohns X)

மார்ச் 11, காஜிபூர் (Uttar Pradesh News): உத்தரபிரதேச மாநிலம், காஜிபூரில் உள்ள மார்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள மவு என்ற இடத்தில் இருந்து திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்த பேருந்து மீது உயர் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உயர் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உடல் கருகினர். இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருப்பினால் மக்கள் வெளியே வர முடியாமல் நீண்டநேரம் சிரமப்பட்டுள்ளார். இத்தகவலறிந்து காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். Ramadan 2024: புனித ரமலான் நோன்பு இன்று தொடக்கம்.. அறிவித்த முஸ்லிம் நாடுகள்..!

(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).