Woman Cuts Private Parts of Man: காதலியை கைவிட நினைத்த காதலன்; ஆணுறுப்பை அறுத்து கதறவைத்த காதலி.!

5 ஆண்டுகளாக உயிராக என பழகிவந்த காதலன், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த காரணத்தால், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த காதலி காதலனின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் நடந்துள்ளது.

Woman Cuts Private Parts of Man: காதலியை கைவிட நினைத்த காதலன்; ஆணுறுப்பை அறுத்து கதறவைத்த காதலி.!
Woman Sad | Genitals (Photo Credit: Pixabay)

ஜூலை 02, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ஹாஜிபூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண்மணி, அங்குள்ள மதுரா பகுதியில் தங்கியிருந்து பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, மதுரா 12 வது வார்டு கவுன்சிலர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதல்-உறவில் இருந்து வந்துள்ளனர்.

திருமணத்தை தட்டிக்கழித்த காதலன்:

இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் நெருங்கி பழகியதாகவும் தெரியவருகிறது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளாக காதலில் இருந்த பெண்மணி, காதலரிடம் திருமணம் செய்யுமாறு (Woman Cuts Genitals of Man) கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் எதோ ஒரு காரணம் கூறி காதலரான வார்டு கவுன்சிலர் தட்டிக்கழித்து இருக்கிறார். Badminton Player Dies by Cardiac Arrest: 17 வயதிலேயே பேட்மிட்டன் வீரருக்கு இப்படியா நடக்கணும்? சர்வதேச போட்டியில் மாரடைப்பால் மரணம்.! 

நீதிமன்றம் வரை சென்றும் பலனில்லை:

இறுதியாக காதலரை நீதிமன்றம் அழைத்துச்சென்று எப்படியாவது கரம்பிடித்துவிடலாம் என பெண் பயிற்சி மருத்துவர், அதற்கான வழிமுறைகளை மேற்கொண்டு இருக்கிறார். இதனிடையே, எந்த விதமான செயல்களும் பலனளிக்கவில்லை. இதனால் ஆவேசத்தின் உச்சத்திற்கு சென்ற பெண் மருத்துவர், காதலரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆணுறுப்பை அறுத்து அதிர்ச்சி கொடுத்த காதலி:

சில நிமிடங்களில் வார்டு கவுன்சிலர் உரத்த குரலில் காப்பாற்றக்கூறி அலறி இருக்கிறார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, படுக்கை அறையில் வார்டு கவுன்சிலர் இரத்த வெள்ளத்தில் கதறித்துடிப்பதை கண்டுள்ளனர். பின் அவரின் ஆணுறுப்பு அறுக்கப்பட்டதை கண்டு, உடனடியாக பாட்னா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

பெண் மருத்துவரின் பகீர் செயல்:

அங்கு மருத்துவர்கள் கவுன்சிலருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 25 வயது பெண் மருத்துவரை கைது செய்தனர். விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துவிட்டு, திருமணத்திற்கு மறுத்ததால் பொறுமையை இழந்து செயல்பட்டது அம்பலமானது.

(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).