Two Trucks Collied, 8 Dead: 2 லாரிகள் மோதி பயங்கர விபத்து; கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 8 பேர் பரிதாப பலி.!
இரண்டு லாரிகள் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் இவ்விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செப்டம்பர் 03, சண்டிகர் (Chandigarh News): ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில், இன்று அதிகாலை நடந்த பயங்கர விபத்து ஒன்றில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இவர்கள் ஹிஸரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், பிதாரணா கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை சந்தித்து இருக்கின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். SC On Bail: நக்சலைட் கமாண்டரின் உறவினருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்; விபரம் இதோ.!
3 பெண்கள் உட்பட 8 பேர் பலி:
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் குருஷேத்ரா மாவட்டத்தில் இருந்து, இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோகாமெடி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது விபத்து நடந்தது தெரியவந்தது. பக்தர்கள் பயணித்த லாரி, வேறொரு லாரியின் மீது மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. மேலும், 10 பேர் படுகாயம் அடைந்தும் இருக்கின்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்களின் காட்சிகள் :
STORY: Road crash in #Haryana leaves 8 dead
READ: https://t.co/Szc8yCOJaq
VIDEO:
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/YN6HPnjtRB
— Press Trust of India (@PTI_News) September 3, 2024
(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

