ஆகஸ்ட் 12, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள நொளம்பூர் பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். நேற்று இரவில் சிறுமி மற்றும் அவரின் தாய் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதனிடையே நள்ளிரவு நேரத்தில் சிறுமி இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் சிறுமியின் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். வானிலை: 7 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
சிறுமி வன்கொடுமை முயற்சி:
இதனால் பதறிய சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளியே சென்ற மகள் வீட்டுக்கு வரவில்லை என பதறிப்போன தாய் வெளியே சென்று பார்த்தபோது மகளை இருவர் வன்கொடுமை செய்ய முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரின் அபயகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், இளைஞர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை:
இதனை அடுத்து இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சிறுமியை இரண்டு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக விளக்கம் அளித்துள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.