Bar DJ Shot Dead: பார் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட டிஜெ; அமைதியாக நடந்து சென்ற கொலையாளி.. ராஞ்சியில் பயங்கரம்.!
திரைப்படத்தை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று ராஞ்சியில் நடந்துள்ளது. பார் வாசலிலேயே இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
மே 27, ராஞ்சி (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் செயல்பட்டு வரும் எக்ஸ்ட்ரீம் பாரில், டிஜேவாக வேலை பார்த்து வருபவர் மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த சந்திப் பிரமாணிக் என்ற சாண்டி. நேற்று இரவு பாரில் சாண்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவருக்கும் - அங்கு மதுபானம் அருந்து வந்த சில நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாக கூறப்படுகிறது.
நெஞ்சில் (Bar DJ Shot Dead in Ranchi) துப்பாக்கிசூடு: பின் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, அனைவரும் அமைதியாகி மதுபானம் அருந்து வந்த கும்பல் தனது வேலையை கவனித்து இருக்கிறது. நள்ளிரவு ஒரு மணியளவில் வேலையை முடித்துக் கொண்ட சாண்டி, பாரின் வாசலுக்கு சென்று தனது வீட்டிற்கு புறப்பட முயற்சித்துள்ளார். அச்சமயம் அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர், சாண்டியின் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு பின் எவ்வித ஐயமும் இன்றி அங்கிருந்து அமைதியாக நடந்து சென்றார். Dog Attack: நடைபாதையில் உறங்கிய 5 வயதுடைய சிறுமி நாய் கடித்து பலி., ஒன்றரை வயது குழந்தை உயிர் ஊசல்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
நிகழ்விடத்திலேயே பலி: இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து போன சாண்டி, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அவரை மீட்ட சக பணியாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தும் பலனில்லை. தகவல் அறிந்த காவல்துறையினர் சாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் விசாரணை: சம்பந்தப்பட்ட மர்ம நபர் சாண்டியை சுட்டுக்கொன்று விட்டு பின் மதுபான விடுதிக்கு கீழே சென்று மதுபான விடுதியை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தனது வெள்ளை நிற காரில் தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. பல பொதுஇடங்களில் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
राँची में एक जिम में मामूली झगड़े पर डीजे लड़के की हत्या कर दी। और आरोपी गोली मार कर मौके से फरार हो गया। #jharkhand pic.twitter.com/dRfP6wVSBa
— Versha Singh () May 27, 2024
(The above story first appeared on LatestLY on May 27, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

