Highway Robbery: திரைப்பட பாணியில் லாரியில் இருந்து பொருட்கள் திருட்டு; லாரி ஓட்டுனர்களை பதறவைக்கும் வீடியோ.!

நெடுஞ்சாலை திரைப்படத்தில் காட்சியாக நாம் பார்த்ததை, பட்டப்பகலில் இளைஞர் கும்பல் ஒன்று நிகழ்த்திக்காண்பித்து நெடுஞ்சாலை கொள்ளை தொடருவதை உறுதி செய்துள்ளது.

Highway Robbery: திரைப்பட பாணியில் லாரியில் இருந்து பொருட்கள் திருட்டு; லாரி ஓட்டுனர்களை பதறவைக்கும் வீடியோ.!
Agra - Mumbai NH Robbery (Photo Credit: @psamachar1 X)

மே 25, ஷாஜியாபூர் (Madhya Pradesh News): சாலை வழியாக பயணம் செய்யும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் வழிப்பறி கொள்ளை என்பது முந்தைய காலங்களில் மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. லாரி ஓட்டுனர்கள் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கும், தென்மாநிலங்களில் இருந்து வடமாநிலங்களுக்கும் ஏற்றிச்செல்லும் பொருட்களை குறிவைத்து, வாகனம் இயங்கும்போதே கொள்ளையடிக்கும் செயல்கள் நெடுங்காலமாக தொடர்ந்து வந்தன. இன்றளவில் அதிகரித்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பல்வேறு எச்சரிக்கை விழிப்புணர்வு செயல்கள் இவ்வாறான சாலைவழி கொள்ளை செயல்களை குறைத்தாலும், அங்கங்கே ஒன்றிரண்டாய் நடந்து வந்துகொண்டு இருக்கிறது. இவ்வாறான கும்பலை பிடிக்க காவல் துறையினரிடம் பல்வேறு கோரிக்கை வைத்தாலும், அவர்களின் செயல்பாடுகள் என்பது திரைமறைவில் தொடர்ந்து தான் வருகிறது. Husband Slits 8 Month Pregnant Wife Womb: ஆண் குழந்தை வேண்டி 8 மாத கர்ப்பிணியின் வயிற்றை அறுத்த கணவன்; துள்ளத்துடிக்க நேர்ந்த பயங்கரம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! 

திரைப்படத்தை மிஞ்சும் நிஜ சம்பவமும், காட்சியும்: கடந்த 2014ம் ஆண்டு என்.கிருஷ்ணா இயக்கத்தில், ஆரி நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை (Nedunjalai) திரைப்படமும், தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளை தொடர்பான பின்னணி கதையை கொண்டு இருந்தன. இப்படம் வெளியான பின் நெடுஞ்சாலைகளில் நடந்த பல கொள்ளை குறித்த விஷயம் மக்களுக்கும் தெரியவந்தது. இந்நிலையில், பட்டப்பகலில் திரைப்பட பாணியில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொள்ளை ஒன்று நடந்ததன் வீடியோ வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜியாபூர் மாவட்டத்தில், ஆக்ரா - மும்பை (Agra Mumbai National Highway) தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்த லாரி ஒன்றன் மீது ஏறிய இளைஞர், அதன் மீது இருந்த மூட்டை ஒன்றை பிரிந்து கீழே போட்டார். பின் இருசக்கர வாகனத்தில் லாரியை பின்தொடர்ந்து வந்த நபரின் உதவியுடன் இரண்டு கொள்ளையர்களும் லாரியில் இருந்து கீழே குதித்தனர். அதிர்ச்சியூட்டும் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. வீடியோவின் பேரில் காவல் துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

(The above story first appeared on LatestLY on May 25, 2024 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).