Asphyxiation Death: குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி குடும்பமே பலி.. கரும்புகை சூழ்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபம்.!
வடமாநிலங்களில் குளிர் வாட்டிவதைக்கும் நிலையில், பல இடங்களில் மக்கள் குளிருக்காக நெருப்பு மூட்டி வருகின்றனர். வீடுகளில் மூடப்படும் தீயினால், சில நேரங்களில் மரணங்கள் ஏற்படும் சோகம் நடைபெறுகிறது.
ஜனவரி 14, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நேற்று இரவு வீட்டில் உறங்கியுள்ளனர். அப்போது, குளிருக்காக வீட்டிற்குள்ளேயே தீ மூட்டியதாகவும் கூறப்படுகிறது. தீயில் இருந்து வெளியேறிய கரும்புகை வீட்டில் சூழ்ந்து ஆக்சிஜனின் அளவை குறைக்க, உறக்கத்தில் இருந்த குடும்பத்தினர் மூச்சுத்திணறி அவதிப்பட்டுள்ளனர். அவர்களால் வீட்டின் கதவையும் திறக்க முடியவில்லை. Jio Airtel 5G Network: 5ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு வந்தது அதிர்ச்சி செய்தி: அதிரடியாக உயரும் ரீசார்ஜ் கட்டணம்.!
கரும்புகை கிளம்பியதால் அதிர்ச்சி: இன்று காலையில் இவர்களின் வீட்டில் இருந்து கரும்புகை வாசனை வெளிப்படவே, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குடும்பத்தினர் நால்வரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி: உயிரிழந்த குடும்பத்தினரில் 2 பேர் சிறுவர்கள் ஆவார்கள். இவர்கள் யார்? எப்படி இறந்தார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குளிருக்காக வீட்டிற்குள் தீமூட்டி, அதனால் உண்டான கரும்புகை ஆக்சிஜனின் அளவை குறைந்தது தெரியவந்தது.
இதன்பின்னரே குடும்பத்தினர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். விசாரணை தொடருகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

