Salem Shocker: "நல்லா படி, அம்மாவை பார்த்துக்கோ" - அறிவுரை கூறிய மூதாட்டி கொலை.. 17 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!

அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கிறார்கள். அம்மாவை நல்லபடியாக பார்த்துக்க வேண்டும், நீ நன்றாக படிக்க வேண்டும் என மூதாட்டி கூறிய அறிவுரை, அவரின் உயிருக்கே எமனாகிப்போன பயங்கரம் சேலத்தில் நடந்துள்ளது.

Salem Shocker:
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, அரியானூர் (Salem News): சேலம் (Salem Crime News Tamil) மாவட்டத்தில் உள்ள அரியானூர், சின்ன சீரகாப்பாடி, மதுரையான்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சின்னத்தாயி (வயது 68). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருக்கார். இதனிடையே, கடந்த ஜனவரி 27, திங்கட்கிழமை அன்று வீட்டில் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அரித்த ஆட்டையாம்பட்டி காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறை விசாரணை:

முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வசித்து வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி கிருஷ்ண பிரியா (வயது 38), பதினோராம் வகுப்பு பயிலும் தம்பதியின் மகன் ஆகியோர், வீட்டில் உள்ள பொருட்களை அவசர கதியில் காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அவர்களின் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். Teacher Sexually Assaulted Boy: 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல்.. ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!

அறிவுரை கூறியதால் ஆத்திரம்:

அப்போது, மூதாட்டியை மகன் கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலத்தை சின்னத்தாயி கூறினார். இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், "எனது கணவர் இறந்துவிட்டார். நாங்கள் மூதாட்டியின் வீட்டின் அருகில் வசித்து வருகிறோம். மகனுடன் அரியனூர் பகுதியில் உணவகம் நடத்தி வந்தோம். சம்பவத்தன்று மூதாட்டி மகனை நேரில் பார்த்து, அப்பா இல்லாமல் அம்மா கஷ்டப்படுவார். ஆகையால் கஷ்டப்பட்டு படித்து அம்மாவை பார்த்துக்கொள். தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும். நன்றாக படி என கூறி இருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர், மூதாட்டி உறங்கும்போது வீட்டிற்கு சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். பின் வீட்டிற்கு வந்த மகனின் சட்டையில் இருந்த ரத்தக்கறையை கண்டு அதிர்ந்துபோன தாய் கேட்டபோது மூதாட்டியை கொலை செய்ததை தெரிவித்து இருக்கிறார். இதனால் இருவரும் காரில் உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவர் மற்றும் அவரின் தாயை கைது செய்த காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர். மாணவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).