Woman Arrested For Faking As Railway Cop: "ஏய்.. நான் போலீஸ்.." எந்த நாடகத்தில்னு கண்டுபிடித்த மாப்பிள்ளை..!
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ரயில்வே காவல் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரி பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
மார்ச் 21, தெலுங்கானா (Telangana News): தெலுங்கானா மாநிலம் (Telangana) நல்கொண்டா மாவட்ட நரகப் பள்ளியை சேர்ந்த மாளவிகா (Malavika) கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்பு பணியில் படித்து சேர எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில் கண்பார்வை குறைபாடு காரணமாக உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. Anushka Shetty’s ‘Ghaati’: கம்பேக் கொடுத்த அருந்ததி.. "உங்க திருமுகத்தை ஒரு முகமா திருப்புங்கோ அண்ணனுக்கு காட்டுங்கோ" என்ற ரசிகர்கள்..!
இது தெரிந்தால் பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று கருதிய மாளவிகா ஷங்கர் பள்ளி ரயில் நிலையத்தில் பணிகள் இருப்பதாக கூறி அதற்காக காவல் சீருடை, தொப்பி , பெல்ட், ஷூ உள்ளிட்டவற்றை வாங்கி அணிந்து கொண்டு நிஜ ரயில்வே துறையினர் வலம் வந்துள்ளார். இந்நிலையில் மாளவிகாவுக்காக பார்க்கப்பட்ட வரன் அவரின் பணி குறித்து ரயில்வேயில் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. தொடர்ந்து ரயில்வே காவல் துணை ஆய்வாளராக வேலை செய்வதாக நடித்த முதுகலை பட்டதாரி பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Mar 21, 2024 02:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

