Father Sells Newborn Daughter: பிறந்து 18 நாட்களேயான குழந்தையை ரூ.1 இலட்சத்திற்கு விற்பனை செய்த தந்தை; 24 மணிநேரத்தில் அதிரடி காண்பித்த காவல்துறை.!
24 மணிநேரத்திற்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை, காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை 12, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பந்துலகுடா பகுதியில் வசித்து வருபவர் முகம்மது ஆசிப் (வயது 43). இவரின் மனைவி ஆஷிமா பேகம் (வயது 31). சமீபத்தில் கர்ப்பிணியாக (Father Sells Newborn Daughter in Hyderabad) இருந்த பேகம், கடந்த 18 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கு தம்பதி ஹபீஜா எனவும் பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.
ரூ.1 இலட்சத்திற்கு விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை:
இதனிடையே, குழந்தையின் தந்தை பிறந்து 18 நாட்களேயான தனது பச்சிளம் மகளை ரூ.1 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிப், ரூ.1 இலட்சம் தொகைக்கு மகளை விற்றுள்ளார். கடந்த ஜூன் 08ம் தேதி மாலை நேரத்தில் குழந்தையை வெளியே கடைக்கு அழைத்துச்சென்று வருவதாக கூட்டிச்சென்றுள்ளார். Health Tips for Dinner: மாலையிலேயே இரவு உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? - அசத்தல் தகவல்.!
காவல்துறையினர் விசாரணை:
பின் நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு அவர் தனியாக வந்துள்ளார். குழந்தையை எங்கே என தாய் கேட்டபோது சரிவர பதில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த குழந்தையின் தாய் பேகம், இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆசிப்பிடம் விசாரணை செய்தனர்.
24 மணிநேரத்தில் அதிரடி காண்பித்த காவல்துறை:
விசாரணையில், ஆசிப் குழந்தையை அப்துல்லாபுர்மேட் பகுதியில் வசித்து வரும் சாந்த் சுல்தானா (55) என்ற பெண்ணிடம் ரூ.1 இலட்சம் பணத்திற்கு குழந்தையை விற்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் சுல்தானாவை தேடிப்பிடித்து, பின் அவரிடம் விசாரணை நடத்தி குழந்தையை பத்திரமாக மீட்டனர். சுமார் 24 மணிநேரத்திற்குள் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் சேர்க்கப்பட்டது.
4 பேர் கைது, சிறையில் அடைப்பு:
இந்த விவகாரத்தில் குழந்தையை விற்பனை செய்த தந்தை ஆசிப், இடைத்தரகர் சுல்தானா, அவரின் கூட்டாளி மினல் சாத், குழந்தையை வாங்கிய கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர்.
(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

