ஜூன் 30, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே மாவட்டத்தில் வசித்து வரும் 9 வயது சிறுவன், விளையாடும்போது மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனை புனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் அனுமதி செய்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி இருக்கின்றனர்.
துறைரீதியான விசாரணை:
அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், சிறுவனுக்கு மருத்துவர்கள் தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்தததாக தெரியவருகிறது. இந்த உண்மையை அறிந்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யவில்லை எனினும், விசாரணை நடத்தி வருகின்றனர். President of India Wishes to Team India: "இந்தியாவே கொண்டாடும் பெருமை" - இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு.!
மருத்துவர்களின் விளக்கம்:
இந்த விஷயம் குறித்து துறை ரீதியான விசாரணையும் நடைபேற்று வரும் நிலையில், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், அலர்ஜி பாதிப்பு தன்மையினால் சிறுவனின் அந்தரங்க உறுப்பும் பாதிக்கப்பட்டு இருந்தது எனவும், அதனால் முதலில் அங்கு அறுவை சிகிச்சை செய்துபின் மூட்டு பகுதியில் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.