Thanjavur: ஆனந்த குளியல் சோகத்தில் முடிந்த பரிதாபம்; 2 சிறார்கள் காவேரியில் மூழ்கி பலி.!
காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழலில், பெற்றோர் தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் 26, திருவையாறு (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு (Thiruvaiyaru), ராஜா நகரில் வசித்து வருபவர் செந்தில் குமார். இவரின் மகன் ஹரி பிரசாத் (வயது 16). இவர் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் பள்ளியில், பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். அங்குள்ள மேலவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் மகன் பிரவீன் (வயது 12). இவர் திருவையாறு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை நேரத்தில், சுமார் 11 மணியளவில் ஹரிப்ரசாத், பிரவீன் உட்பட அவரின் நண்பர்கள் குழு அங்குள்ள திருவையாறு ஐயப்பன் கோவில் படித்துறை காவேரி ஆற்றுக்கு சென்றுள்ளது. Hosur Accident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 13 வாகனங்கள்; தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம்.. ஓசூரில் கோர விபத்து.!
நேரில் மூழ்கி பரிதாப பலி:
அங்கு இவர்கள் அனைவரும் குழுவாக ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம், நீரின் வேகம் காரணமாக திடீரென ஹரிபிரசாத் மற்றும் பிரவீன் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை காப்பாற்றக்கூறி அலறவே, அவர்களின் நண்பர்கள் கரைக்கு வந்து மக்களிடம் உதவி கேட்டு இருக்கின்றனர். அவர்கள் வருவதற்குள் இருவரும் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், சிறார்களின் உடலை 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து வந்த திருவையாறு காவல்துறையினர், சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

