Electrocution Death: மின்சாரம் தாக்கி அக்கா-தம்பி அடுத்தடுத்து தாக்கி பலி; இறுதிச்சடங்கில் எமனாக வந்த ப்ரீசர் பாக்ஸ்.!
வயர்மேனாக வேலை பார்த்து வந்த டி.என்.இ.பி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரியும் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து பலியானது நடந்துள்ளது.
செப்டம்பர் 24, வலங்கைமான் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியில் வசித்து வந்தவர் குருமூர்த்தி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்பழுதை சரி செய்யச் சென்றபோது, மின்சாரத்தை துண்டிக்காமலேயே மின்கம்பத்தின் மீது ஏறியதால் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு அவரின் வீட்டில் நடைபெற்ற நிலையில், குருமூர்த்தியின் உடல் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குக்கு உறவினர்கள் பலரும் வந்து குளிர்பதன பெட்டியை பிடித்தவாறு கதறி அழுது கொண்டிருந்தனர். இதனிடையே, குருமூர்த்தியின் தங்கை சுந்தரி என்பவர், இறுதிச் சடங்குக்காக தங்களது உறவினர்களுடன் வலங்கைமான் வந்திருந்தார். வானிலை: வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!
தம்பி-அக்கா அடுத்தடுத்து பலி:
அப்போது, குருமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பிரீசர் பாக்ஸில் இருந்து திடீரென மின்சாரம் பாய்ந்து விடவே, சுந்தரி உட்பட ஏழு பேர் மொத்தமாக மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்தனர். இதில் சுந்தரி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 6 பேர் உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரர் மின்சாரம் தாக்கிய உயிரிழந்த நிலையில், அவரின் சகோதரியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

