Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.!

அரசுப்பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்த இளைஞர், ஒருகட்டத்தில் ஓட்டுனரின் மடியில் அமர்ந்துகொண்டு அலப்பறை செய்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.!
Tiruppur Bus Drunken Man Atrocity (Photo Credit: @Srinietv2 X)

அக்டோபர் 24, திருப்பூர் (Tiruppur News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பூர் நோக்கி, நேற்று இரவில் தமிழ்நாடு அரசுப் பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக ரகுராம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, திருப்பூர், காந்தி நகர் சிக்னல் பகுதியில் வந்தபோது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் பேருந்து ஓட்டுனரிடம் தகராறு செய்துள்ளார்.

போதை ஆசாமிக்கு கண்டனம்:

ஒருகட்டத்தில், தனது இருசக்கர வாகனத்தை அவர் ஓரமாக நிறுத்திவிட்டு, பேருந்துக்குள் ஏறி ஓட்டுனரின் மடியில் குழந்தை போல அமர்ந்துகொண்டார். இதனால் பதறிப்போன ஓட்டுநர் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட, நடத்துனர் மற்றும் பொதுமக்கள் போதை ஆசாமியை கண்டித்தனர். School Girl Dies: காய்ச்சலுடன் தேர்வெழுத வந்த மாணவி, மயங்கி விழுந்து மரணம்; ஈரோட்டில் சோகம்.! 

போதையில் அலப்பறை:

நடுரோட்டில் பேருந்து நின்றதால் காவல்துறையினர் வந்து விசாரித்து, போதை ஆசாமியை அங்கிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், போதையில் இருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவன ஊழியர் பிரதீப் என்பதும், பேருந்து ஓட்டுநர் சிக்னல் பகுதியில் தனது வாகனத்தின் மீது மோத வந்ததுபோல இருந்ததால், இப்படி நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ வைரல்:

இதனையடுத்து, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பிரதீப்பின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின் சொந்த ஜாமினில் விடுவித்து அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, பேருந்து ஓட்டுனரின் மடியில் பிரதீப் அமர்ந்து அலப்பறை செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அரசுப்பேருந்து ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி அமர்ந்து அலப்பறை செய்த காணொளி:

(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).