Women Raped by Rowdy: கண்ணீருடன் உதவிகேட்ட பெண்ணை கற்பழித்த ரௌடி; திருச்சியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்.!
கட்டிட ஒப்பந்தத்தார் பணத்தை ஏமாற்றியதால், அதனை மீண்டும் பெற்றுக்கொடுக்கக்கூறி ரௌடியிடம் உதவி கேட்டுச்சென்ற பெண், அதே ரௌடியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 14, லால்குடி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் வசித்து வந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி, அவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தனது கணவர் அனுப்பிய பணம் மற்றும் தான் சிறுச்சிறுக சேமித்து என கிடைத்த தொகையை வைத்து பெண்மணி வீடு ஒன்று கட்டுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார். வீட்டு பணிகளை மேற்கொள்ள வந்த ஒப்பந்ததாரர், ரூ.2 இலட்சம் வரை கையாடல் செய்ததாக தெரியவருகிறது. இதனை தனது பணத்தை மீட்கக்கூறி, சித்தார்த் என்பவரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். முதலில் உதவி செய்வது போல நடித்த சித்தார்த், இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்து இருக்கிறார். College Girl Death: காதலருடன் சரக்கடித்துவிட்டு போதை காளான் சாப்பிட்ட மாணவி மர்ம மரணம்; கல்லூரி மாணவர் கைது..!

உதவிகேட்டு சென்று நடந்த சோகம்: அப்பகுதியில் ரௌடிபோல வலம்வந்த சித்தார்த், பெண் உதவி கேட்டபோது உதவுவதாக நம்ப வைத்து இருக்கிறார். அதன்பேரில் கத்தியை காண்பித்து மிரட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாகவும், வெளிநாட்டில் இருக்கும் கணவருக்கு அனுப்புவதாகவும் மிரட்டி இருக்கிறார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வேறொரு வழக்கில் சிறையில் இருந்த ரௌடி சித்தார்த் மீது தற்போது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 சவரன் தங்க சங்கிலியும் பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது.
(The above story first appeared on LatestLY on Feb 14, 2024 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

