Accident Caught on Camera: டூவீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய் - மகன் துடிதுடிக்க பலி., நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

விரைவுச்சாலையில் ஆபத்தான வகையில் எதிர்திசையில் பயணித்த கார், இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Accident Caught on Camera: டூவீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய் - மகன் துடிதுடிக்க பலி., நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Ghaziabad Expressway Accident (Photo Credit: @SachinGuptaUP X)

ஜூலை 23, காசியாபாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், டெல்லி - மீரட் அதிவேக (Delhi Meerut Expressway) விரைவுச்சாலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கர விபத்து ஒன்று நடைபெற்றது. அதிவிரைவுச் சாலையில் இருசக்கர வாகனம் பயணம் செய்த நிலையில், ஆபத்தான வகையில் எதிர்திசையில் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. Businessman Died of Heart Attack: உடற்பயிற்சி செய்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு பலி..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்..!

கார் - டூவீலர் நேருக்கு நேர் மோதி பயங்கரம்:

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த நபர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாய் - மகனுக்கு நேர்ந்த சோகம்:

பின் இதுகுறித்து விசாரணை செய்கையில், டெல்லியில் உள்ள மேற்கு வினோத் நகர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி மஞ்சு தேவி (40), இவரின் மகன் யாஷ் கவுதம் (20). இவர்கள் இருவரும் ஹரித்வார் சென்றுவிட்டு, பின் மீண்டும் டெல்லி நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போதுதான், காசியாபாத் பகுதியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர், விஜய் நகர் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் டேவ்டுட் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 07:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).