Saliva Face Massage (Photo Credit: @TeluguScrbe X)

ஜூன் 11, உத்தரபிரதேசம் (Uttar Pradesh News): முகத்தை பளபளப்பாக மற்றும் மென்மையாக வைத்திருக்க பலரும் பல வழிகளை முயற்சிக்கின்றனர். அந்த வகையில் வறண்ட மற்றும் இறந்த செல்கள் கொண்ட முகத்திற்கு மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மசாஜ் செய்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. சருமத்திற்கு மசாஜ் செய்வது, சரும அமைப்பை மேம்படுத்துவதுடன், முகத்திற்கு பொலிவைத் தருகிறது. இரவில் மசாஜ் செய்வது சிறந்த பலன்களைத் தரும். NEET-UG 2024 Exam Controversy: நீட் வினாத்தாள் கசிவா.? தேர்வு குளறுபடி.. தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..!

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில், முடிதிருத்தும் சலூன் கடைக்காரர் ஒருவர் அவரின் வாடிக்கையாளரின் முகத்தில் எச்சில் துப்பி மசாஜ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர், வீடியோவில் தெரியும் நபரான அம்ஜத் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.