11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!

டிராக்டரில் ஏற ரொடேட்டர் மீது கால் வைத்து சிறுமி நின்றபோது, மகள் இருப்பதை கவனிக்காமல் தந்தை அதனை இயக்கியதால் சிறுமி உயிரிழந்தார்.

11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
Child Death Hand (Photo Credit: Pixabay)

அக்டோபர் 07, குடியாத்தம் (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஏர்த்தங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 11 வயதுடைய ஜெனிகா என்ற மகளும் இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். Minister Ma. Subramanian: விமானப்படை சாகசத்தை காணவந்து ஐவர் பலியான விவகாரம்.. காரணம் என்ன?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.! 

தந்தையுடன் செல்ல ஆசை:

விவசாய வேலைகளை செய்து வரும் கார்த்திகேயன், நேற்று தனது டிராக்டரின் பின்பக்கம் ரொட்டேட்டரை பொருத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில், தந்தையை கண்ட மகள் ஜெனிகா, அவருடன் பிராக்டிரியரில் செல்ல வேண்டுமென ரோட்டேட்டரில் கால் வைத்து ஏற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

சிறுமி பரிதாப பலி:

இதனை கவனிக்காத கார்த்திகேயன் ரொட்டேடரை இயக்கியதால், சிறுமி அதில் சிக்கி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குடியாத்தம் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).