Rani Rampal: ஹாக்கி வீராங்கனையின் சூட்கேஸை உடைத்து நொறுக்கிய ஏர் இந்தியா; பயணத்தில் குளறுபடி.. புகார்.!

விமான நிலையத்தில் சூட்கேஸை கையாளும் பணியாளர்கள் அலட்சியத்தால், அது சேதமான சம்பவம் நடந்துள்ளது.

Rani Rampal: ஹாக்கி வீராங்கனையின் சூட்கேஸை உடைத்து நொறுக்கிய ஏர் இந்தியா; பயணத்தில் குளறுபடி.. புகார்.!
Rani Rampal Suitcase Damaged by Air India (Photo Credit: @imranirampa X)

அக்டோபர் 06, புதுடெல்லி (Sports News): இந்திய ஹாக்கி அணியின் வீராங்கனை ராணி ராம்பால் (Rani Rampal). இவர் சமீபத்தில் கனடா சென்றிருந்த நிலையில், பின் அங்கிருந்து ஏர் இந்திய (Air India) விமானத்தில் தாயகம் திரும்பினார். இன்று அதிகாலை அவரின் விமானம் புதுடெல்லி விமான நிலையம் வந்தது. அப்போது, அவர் தன்னுடன் எடுத்து வந்த பயண பையை சோதித்தபோது, அது உடைந்து இருந்தது. Former Cricketer Mother Dies: முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்பு.. காரணம் என்ன..? 

உடமைகளை இவ்வாறு தான் கையாள்கிறதா?

இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, உடைந்துபோன சூட்கேசை புகைப்படம் எடுத்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுதொடர்பான தகவலை ஏற்றுக்கொண்டுள்ள ஏர் இந்திய நிறுவனம், விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏர் இந்தியா பயணிகளின் உடமைகளை இவ்வாறு தான் கையாள்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ராணி ஏர் இந்திய நிறுவனத்திடம் கேள்வி எழுப்பிய காணொளி:

(The above story first appeared on LatestLY on Oct 06, 2024 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).