Lifetime Prison Impressment on Minor Girl Rape Case: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற சிறுமியை முதியவர் பலாத்காரம் செய்த துயரத்தால், அவர் இரண்டரை வயது குழந்தைக்கு தாயாகிவிட, இறுதியில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Lifetime Prison Impressment on Minor Girl Rape Case: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு வாழ்நாள் சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
Judgement (Photo Credit: Pixabay).jpg

மே 01, சிங்பம் (Jharkhand News): ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பம் மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 13 வயதுடைய (Minor Girl Rape Case) சிறுமி ஒருவர் 60 வயது நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி 13 வயதாக இருக்கும்போது பலாத்காரத்தை எதிர்கொண்ட நிலையில், அவர் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தார். திருமணமாகாத சிறுமி தற்போது தாயாக இருந்து வருகிறார்.

ஆயுள் & 10,000 சிறை தண்டனை: இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 60 வயது முதியவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த வழக்கு விசாரணை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், குற்றவாளியான முதியவரை சாகும் வரை சிறையில் அடைக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். Covishield Side Effects: கோவிஷீல்டு தடுப்பூசியால் என்னென்ன பக்கவிளைவுகள் வரும்.? வெளியான அதிர்ச்சி தகவல்..! 

மருத்துவமனையில் அம்பலமான துயரம்: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவத்தன்று சிறுமி விறகு சேகரிக்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது, முதியவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் 13 வயதில் இத்துயரம் நடந்துள்ளது. குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என்று கயவன் மிரட்டியதால், சிறுமி முதலில் தனது பெற்றோரிடமும் எதையும் கூறாமல் இருந்தார். பின் அவரின் உடல்நலத்தில் மாற்றம் ஏற்பட்டு தாய் விசாரித்த போது எதுவும் கூறாத நிலையில், மருத்துவமனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது.

அங்கு மருத்துவர்கள் மற்றும் சிறுமியின் தாய் மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரியவரவே, அதன்பின்னரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி தற்போது 17 வயதை எட்டினாலும், அவர் தனது இரண்டரை வயது குழந்தையுடன் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.

(The above story first appeared on LatestLY on May 01, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).