Trending Video: சில நொடிகள் மரத்தை தாக்கிய மின்னல்; பதைபதைப்பு காட்சிகள் கொண்ட வைரல் வீடியோ..!

மின்னல் தரைநோக்கி பாயும் போது சில நேரம் உயிர் சேதம் ஏற்படலாம். அவை பூமியுடன் தொடர்பு கொண்டு கடத்தப்படுவதால் மின்னல் தாக்கி சேதம் நடக்கிறது.

Lightning on Tree (Photo Credit: CCTV Videos Twitter)

ஜூன் 28, சென்னை (Trending News): மழை மேகங்கள் நம்மை சூழ்ந்துவிட்டாலே இடி-மின்னலுக்கு பஞ்சம் என்பது இருக்காது. ஒரேயொரு பளீர் வெளிச்சமாக ஏற்படும் மின்னல், நொடியில் வானில் இருந்து புவிவரை வந்து செல்லும்.

மேகங்களின் இடையில் உருவாகும் மின்னல், தரைநோக்கி நோடிப்பொழுதில் பாய்ந்து தூரத்தில் இருந்து பார்க்க வாணவேடிக்கை போல தோன்றவைக்கும்.

மேகக்கூடத்தில் மின்னூட்டம் பெரும் மேகங்கள், எதிர் மின்னூட்டம் கொண்ட மேகங்களுடன் மோதி, காற்றின் வழியே மின்னூட்டம் மின்னலாக கடத்தப்படுகிறது. இவை ஒளி இழையாய் பாய்கிறது.

மின்னல் தரைநோக்கி பாயும் போது சில நேரம் உயிர் சேதம் ஏற்படலாம். அவை பூமியுடன் தொடர்பு கொண்டு கடத்தப்படுவதால் மின்னல் தாக்கி சேதம் நடக்கிறது.

வானில் வானூர்தி பறக்கும் போது மின்னல் தாக்குதல் நிகழ்வு நடந்தாலும், அவை தரையுடன் நேரடி தொடர்பில் இல்லாததால் அதிக சேதம் இருப்பதில்லை.

இந்நிலையில், வானில் இருந்து கிளம்பிய மின்னல் சுமார் 2 முதல் 4 நொடிகள் வரை நகரத்தின் நடுவே இருந்த மரத்தை தாக்கியது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement