Sudarsan Pattnaik Sand Art Santa Claus (Photo Credit: @sudarsansand X)

டிசம்பர் 25, பூரி (Puri): ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரியை சேர்ந்த பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் (Sudarsan Pattnaik). தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு அவர் மணலில் சிற்பம் வடித்து மக்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

உலக சாதனை படைக்க எண்ணம்: இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகமே கொண்டாடிவரும் வேலையில், மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் உலக சாதனை படைக்க எண்ணியுள்ளார். இதனையடுத்து, 2 டன் பல்லாரி வெங்காயம் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா க்ளாஸின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார். Minors Kill Sexual Assaulter: பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரம்: 25 வயது நபர் கொலை., உடல் எரிப்பு: 3 சிறார்கள் பரபரப்பு சம்பவம்.! 

Sand Art of Santa Claus (Photo Credit: @sudarsansand X)

2 டன் வெங்காயத்தில் உலக சாதனை: சுமார் 2 டன் வெங்காயம் கொண்டு 100 அடி நீளம், 20 அடி உயரம், 40 அடி அகலத்தில் உருவாக்கப்பட்ட சாண்டா க்ளாஸ் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்திய உலக சாதனை (World Record Book of India) புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

சான்றிதழும் வழங்கப்பட்டது: இந்த சாதனையை இந்திய உலக சாதனை பக்கத்தின் தலைமை இயக்குனர் சுஷ்மா நர்வேக்கார், மூத்த அதிகாரி சஞ்சய் நர்வேக்கார் ஆகியோர் நேரில் பார்த்து அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை வழங்கினர்.