Viral Video: ஒரு நொடியில் உயிர் தப்பிய சாலையோர வியாபாரி... திடுக்கிடும் வீடியோ..!
ஆரணி அருகே சாலையோர வியாபாரியை லாரி மோதியதில் வியாபாரி ஒரு நொடி அளவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜனவரி 05, திருவண்ணாமலை (Thiruvannamalai): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வேலூர் சாலையில் சாலை ஓர வியாபாரி ஒருவர் பிஸ்கட் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அப்பொழுது வெண்பாக்கம் பகுதியில் இருந்து வேலூருக்கு சாலை அமைக்க தார் ஏற்றி கொண்டு வந்த லாரி சாலை ஒர வியாபாரியின் மீது மோதியது. லாரி மோதிய பின்பு சட்டென்று சுதாரித்துக் கொண்டு வியாபாரி எழுந்ததால் ஒரு நொடி அளவில் உயிர் தப்பினார். உடனடியாக வியாபாரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். Yellow Alert: 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
இச்சம்பவம் குறித்து ஆரணி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஆரணி அருகே சாலை ஓர வியாபாரி மீது லாரி மோதி வியாபாரி உயிர் தப்பிய சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலும் ஆகி வருகிறது.
நொடியில் உயிர் தப்பிய சாலை ஓர வியாபாரி#thiruvannamalai #Chennai pic.twitter.com/vkm0gaMOVh
— Backiya (@backiya28) January 5, 2024
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

