அக்டோபர் 25, பரத்பூர் (Social Viral): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் (Bharatpur, Rajasthan), பயனா பகுதியை சேர்ந்தவர் நிற்பத் குர்ஜார் (Nirpat Gurjar). இவர்களின் குடும்பத்திற்கும் - அப்பகுதியில் வசித்து வரும் உறவினரான மற்றொரு குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு (Land Dispute) இருந்து வந்ததாக தெரியவருகிறது.

இன்று காலை 07:00 மணியளவில் இவர்களுக்குக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த எதிர்தரப்பு நிற்பத்தை டிராக்டர் கொண்டு ஏற்றி கொலை செய்துள்ளது.

டிராக்டர் (Tractor) சக்கரத்தில் சிக்கியவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு, இரண்டு முறை டிராக்டரை அவரின் மீது செலுத்திய பதைபதைப்பு சம்பவமும் நடந்துள்ளது. NCERT Recommends Replacing India With Bharat: இந்தியாவை பாரதமாக மாற்ற பரிந்துரை; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அதிரடி..! 

இந்த அதிர்ச்சி காட்சிகளை, அங்கிருந்தவர் வீடியோ (Murder Video Captured) எடுத்து இருக்கிறார். காவல் துறையினர் கொலை தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பயானா உதவி காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் கலானியா தலைமையிலான அதிகாரிகள் காலை 07:30 மணிக்கு மேல் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

கொலையான நிற்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பயானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.