Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!

ஹைதராபாத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போட்டோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident: விபத்தில் உயிருக்குப் போராடிய நபர்.. காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்..!
Road Accident (Photo Credit: @ChotaNewsTelugu X)

நவம்பர் 21, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ORR கீசரா எக்சிட் கேட் என்ற இடத்தில், எலக்ட்ரீசியனாக பணிபுரிபவர் தான் யெலேந்திரா (வயது 35). இவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் எலந்தர் இரண்டு கால்களில் காயம் ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க கூட முடியவில்லை. அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். Miss Charm India 2024: இந்தியாவின் வசீகரப் பெண் யார் தெரியுமா..? விவரம் உள்ளே..!

சாலையோரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. அங்கு இருந்த மக்கள் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த அரைமணி நேரத்துக்குப் பிறகே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

காப்பாற்றாமல் போட்டோ எடுத்த மக்கள்:

(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).