Swiggy-Zomato Troll Naveen-ul-Haq: மண்ணைக்கவ்விய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி; நவீனை வச்சி செய்யும் ஜுமாடோ, ஸ்விக்கி நிறுவனங்கள்.!

மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிய லக்னோ அணி, 16 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.

Swiggy-Zomato Troll Naveen-ul-Haq: மண்ணைக்கவ்விய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி; நவீனை வச்சி செய்யும் ஜுமாடோ, ஸ்விக்கி நிறுவனங்கள்.!
Swiggy & Zomato (Photo Credit: Facebook)

மே 25, சென்னை (Cricket News): நேற்றைய (25-05-2023) ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

மறுமுனையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. HC on Not Allowing Spouse To Have Sex: துணையை உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக்கொடுமை – அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

மும்பை அணியின் வெற்றி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லக்னோ அணியின் கிரிக்கெட் வீரர் நவீன்-உல்-ஹக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னதாக ஆர்.சி.பி தோல்வியை தொடர்ந்து மாம்பழத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இந்த பதிவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்யும் நிலையில், அதனை உணவு விற்பனை நிறுவனங்களான ஸ்மோடோ மற்றும் ஸ்விக்கி நிறுவனமும் செய்துள்ளது. இந்த பதிவுகளில் வைரலாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on May 25, 2023 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).