Gold Silver Price: விரைவில் 72,000ஐ நெருங்கும் தங்கம்.. இன்றைய தங்கம் விலை என்ன?.. விவரம் இதோ.!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையானது மாறிமாறி குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருந்த நிலையில், ரூ.72,000 ஐ கடந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 28, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. வானிலை: காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை.. லிஸ்ட் இதோ.! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.71,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து கிராம் தங்கம் இன்று ரூ.8935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,11,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement