Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

மே 28, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். Chennai News: தலைக்கவசம் அணியாததால் சோகம்.. ரோடு பள்ளத்தால் மெக்கானிக் பலி.!

இன்று காலை 10 மணிவரை கீழ்காணும் மாவட்டங்களில் மழை :

இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.