Gold Silver Price: சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு.!

ரூ.60 ஆயிரத்தை கடந்துவிட்ட தங்கத்தின் விலை, தொடர்ந்து பன்மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்க வேண்டும் என நினைப்போர், தற்போதே வாங்கிக்கொள்வது நல்லது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60 ஆயிரம் சென்று விட்டது. மருதமலை திரைப்பட பாணியில் சம்பவம்.. பேஸ்புக்கில் திருமண போட்டோ வெளியாகி விசாரணையில் பகீர்.! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, ரூ.7,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.1,04,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.60 ஆயிரம் தாண்டி இருப்பது, நகை வாங்க வேண்டும் என நினைத்தோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement