Accused Lakshmi Alias Nishanthi | Maruthamalai Movie Poster (Photo Credit: @Sunnewstamil X / YouTube)

ஜனவரி 27, சீர்காழி (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (Sirkazhi), திட்டை, குளங்கரை தெருவில் வசித்து வருபவர் ஜீவா. இவரின் மகன் சிவச்சந்திரன். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவசந்திரனின் தாய் உடல்நிலை சரியில்லாத சமயத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அச்சமயம், நிஷாந்தி என்பவர் டான் மருத்துவராக வேலை பார்த்து வருகிறேன் என சிவசந்திரனிடம் அறிமுகம் செய்துள்ளார்.

பேஸ்புக்கால் அம்பலமான உண்மை:

பின் இருவரும் பழகி வந்த நிலையில், காதல் வயப்பட்டதைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில் பெற்றோர்-உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சீர்காழி, புத்தூர் வாய்க்காங்கரை தெருவில் வசித்து வரும் தங்கராசுவின் மகன் நெப்போலியன் (வயது 34), சீர்காழியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காணாமல் போன மனைவி வேறொருவருடன் இருக்கிறார்:

இந்த புகாரில், கடந்த 2017ம் ஆண்டு தன்னை மீரா என அறிமுகம் செய்துகொண்ட பெண்ணும், தானும் காதலித்து திருமணம் செய்தோம். பின் கடந்த 2021ல் சென்னையில் இருந்தபோது, என்னிடம் எதுவும் சொல்லாமல் மீரா சென்றுவிட்ட்டார். பின் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு என் மீராவை சீர்காழியை சேர்ந்த ஒருவர் திருமணம் செய்ததாக புகைப்படம் பார்த்தேன். மீராவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். Nabati Wafer: பெற்றோர்களே.. குழந்தைக்கு ஆசையா நபார்டி வாங்கி கொடுக்குறீங்களா? உயிருடன் நெளிந்த புழுக்கள்.! 

விசாரணை தகவல் சொல்வது:

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி என்ற நிஷாந்தியை கைது செய்தனர். அவரிடம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கொடியம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமிக்கும், பழையாறு கிராமத்தில் வசித்து வரும் சிலம்பரசனுக்கும், கடந்த 2017ல் திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்கு தர்ஷன் என்ற மகன், ரேணுகா என்ற மகள் இருக்கின்றனர்.

பெயரை மாற்றி திருமணம்:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக கணவர் உயிரிழந்த காரணத்தால், பெண் குழந்தையை இறந்த கணவரின் அண்ணனான ஜெயக்குமாரின் பராமரிப்பில் விட்டு இருக்கிறார். ஆண் குழந்தையை கொடியம்பாளையத்தில் இருக்கும் அம்மாவின் வீட்டில் வளர்த்து வருகிறார். ஆண் குழந்தையுடன் அவர் தங்கியிருந்துள்ளார். காலப்போக்கில் தனது பெயரை மாற்றிக்கொண்ட லட்சுமி, 2017ம் ஆண்டு புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் நெப்போலியனை திருமணம் செய்து, 2021ல் தலைமறைவானார்.

கைது நடவடிக்கை:

அதன்பின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், கோல்டன் நகரில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மகன் ராஜாவிடம், தான் மருத்துவர் என கூறி அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி தலைமறைவாகியுள்ளார். இதனைப்போலவே, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபரையும் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தகவலை அறிந்த சிவசந்திரனும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் லட்சுமியை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.

திரைப்பட பாணியில் செயல்:

நடிகர் அர்ஜுன் - வடிவேலு நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில், பெண் ஒருவர் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் செய்வது போன்ற காமெடி காட்சிகள் இடம்பெற்று இருக்கும். அந்த சம்பவம் இங்கு உண்மையாக நடந்து, 4 பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.