TV5 (Photo Credit: YouTube)

நவம்பர் 01, ஹைதராபாத் (Telangana News): டிவி5 (TV5) இந்திய தெலுங்கு மொழி 24 மணி நேர செய்தி சேனல். இது ஸ்ரேயா பிராட்காஸ்டிங் பிரைவேட் லிமிடெட் மூலம் 2 அக்டோபர் 2007 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சித்தூரைச் சேர்ந்த பி.ஆர்.நாயுடு ( பொல்லினேனி ராஜகோபால் நாயுடு ) என்பவரால் நிறுவப்பட்டது. ஆகஸ்ட் 2016 இல், TV5 அதன் வணிக நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி TV5 Money என்ற டிஜிட்டல் நிறுவனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் கீழ் யூடியூப் சேனல், மொபைல் ஆப்ஸ், இணையதளம் மற்றும் ஐபிடிவி போன்றவற்றினை வழி நடத்தினர். Onion Bomb Blast: வெங்காய வெடி வெடித்துச் சிதறி சோகம்; இளைஞர் உடல் சிதறி மரணம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

இந்த நிலையில் இந்த சேனல் பற்றிய ஒரு சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது. இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது 2012 ஆம் வாக்கில் மக்களிடையே பிரபலமாவதற்காக மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக இரவு நேரங்களில் மிட் நைட் மசாலா வீடியோக்களை ஒளிபரப்பு செய்துள்ளது. இது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

டிவி5 சேனலின் மிட் நைட் மசாலா வீடியோக்கள்: