Gujarat Accident: திடீரென கவிழ்ந்த ஜல்லி லாரி.. துடிதுடித்து நசுங்கி இறந்த இரண்டு சிறுமிகள்.. குஜராத்தில் பரபரப்பு..!

குஜராத்தில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Gujarat Accident (Photo Credit @Zee24Kalak X)

ஜூன் 5, பலன்பூர் (Gujarat News): குஜராத் மாநில பலன்பூரில் உள்ள தொழிற்சாலை வளாகம் வழியே ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கவிழ்ந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களின் மேல் விழுந்தது. அதில் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. மற்றொரு குழந்தையை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்க பட்டிருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. Omni Bus Accident: ஊத்தங்கரையில் ஆம்னி பேருந்து விழுந்து விபத்து.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் விபத்து நடந்த உடனே அங்கிருந்து ஓடி விட்டார். இது குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement