செப்டம்பர் 13, ஆக்ரா (Social Viral): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வரும் பெண்மணி பூனம் லால்.
இவர் கடந்த 2021ம் ஆண்டு வரையில் ப்ரயாக்ராஜ் மாவட்டத்தில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்த்துவந்த நிலையில், அங்கு இருந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கையில், பூனம் லால் மீது விசாரணை திரும்பி, அவருக்கு எதிராக புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. Ayushman Bhava Inauguration: ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும் உயர்தர சுகாதார பாதுகாப்பு-‘ஆயுஷ்மான் பவ’ இயக்கம்: காணொலி வாயிலாக துவக்கம்.!
துறை ரீதியான விசாரணையை தொடர்ந்து, அவர் ஆக்ரா நகரில் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் குழந்தையை ஆத்திரத்தில் செருப்பால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, காவல் துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
In #Agra's govt run children shelterhome (Pachkuiyaan), Poonam Lal, the center superintendent was caught slapping a girl with slippers. Earlier she was booked for abetment to suicide in #Prayagraj district in 2021 after a 15-yr-old girl allegedly killed her self in shelter home pic.twitter.com/JE5V56jR7l
— Arvind Chauhan 💮🛡️ (@Arv_Ind_Chauhan) September 12, 2023