Thief Shot Dead: துப்பாக்கி முனையில் பணத்தை பறித்த திருடன்; சுட்டுக்கொண்டு பணத்தை மீட்டுத்தந்த நபர்.. பரபரப்பு வீடியோ உள்ளே.!
உணவகத்தில் துப்பாக்கியை காண்பித்து திருட்டு செயலில் ஈடுபட்ட திருடனை, மற்றொரு துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 06, டெக்சர்ஸ் (Trending Video): அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது, 80 - 90-களில் விற்பனை செய்யப்பட்ட பிக்கப் ட்ரக்கில் வருகை தந்த நபர், தனது முகத்தை மூடியவாறு துப்பாக்கி முனையில் அங்கிருந்த நபர்களின் பணத்தை பறித்தார்.
அந்த சமயத்தில், உணவகத்தில் இருந்த நபர் தன்வசம் கைத்துப்பாக்கியை வைத்துள்ளார். குற்றவாளி பணத்தை பறித்துக்கொண்டு உணவகத்தில் இருந்து செல்ல முயற்சித்தபோது, சற்றும் எதிர்பாராத வேளையில் திருடனை நோக்கி அவர் சுட்டுள்ளார். Bus Accident: 75 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து; 27 பேர் துடிதுடிக்க மரணம்.!
இந்த சம்பவத்தில் திருடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, காவல் துறையினர் விசாரணை நடத்தி மக்களின் பாதுகாப்பு கருதி கொள்ளையை தடுக்க கொலை செய்தவரை நிரபராதியாக அறிவித்து விடுவித்தனர்.
இச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவில் திருடனின் செயல்பாடுகள் மற்றும் அவன் பலியான வீடியோ பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது. அவை தற்போது வைரலாகியுள்ளன.
(The above story first appeared on LatestLY on Jul 06, 2023 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

