Viral Video: எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! சவப்பெட்டியில் கல்யாணத்திற்கு வந்த மாப்பிள்ளை.. வைரலாகும் வீடியோ..!

சவப்பெட்டியின் மூலம் திருமணத்திற்கு மாப்பிள்ளை என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Viral Video (Photo Credit: @Thaadikkaran X)

ஆகஸ்ட் 29, கானா (World News): மீம்ஸ் மோகம் இன்றைக்கு உலகம் முழுதையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது. அத்ஹிலும் முன்னர் ட்ரெண்ட் ஆன ஒரு மீம் வீடியோவில் சவப்பெட்டியை தூங்கிக்கொண்டு சிலர் டான்ஸ் ஆடுவார்கள். இந்த வீடியோ முதலில் வெளியான போது இது ஏதோ ஹாலிவுட் திரைப்படம், அல்லது வெளிநாட்டு திரைப்பட காட்சி என பலர் கருதினர். ஆனால் இது உண்மையிலேயே சவப்பெட்டிவை வைத்து நடனமாடும் குழுவின் வீடியோ. கானா என்ற நாட்டில் இந்த குழு இயங்குகிறது. நம்ம ஊரில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் பிணத்திற்கு முன்பு நடனமாடிக்கொண்டே ஊர்வலம் போவார்கள் அல்லவா அதே போன்ற பழக்கம் அந்நாட்டு மக்களிடமும் இருக்கிறது. இறந்தவர், இறுதியாத்திரை சந்தோஷமாக அமைய வேண்டும் என்பது தான் அது. TV Screen Cleaning Tips: டிவி ஸ்க்ரீனை துடைக்கப் போறீங்களா? அப்போ இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க!

இவர்கள் அவர்கள் நடத்திய சவப்பெட்டி ஊர்வலங்களை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தான் வைரலாகியது. இந்நிலையில் இந்த வீடியோவினைப் போன்று கல்யாண மாப்பிளை ஒருவர் திருமணத்திற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement