வானிலை: 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை: 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்.!
Tamilnadu Rains File Pic (Photo Credit : Youtube)

அக்டோபர் 25, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தென்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் (தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடலங்களிலும்) மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று காலை 05:30 மணி அளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று 08:30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வருகின்ற 26-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், வருகின்ற 27-ஆம் தேதி காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும்.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!

மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

(The above story first appeared on LatestLY on Oct 25, 2025 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).