Wedding Reel: "அவனிடமே... அவனிடமே... எனது கனவை அனுப்பு..." வைரலாகும் ஜோடி புறாக்களின் ரீல்ஸ்..!
தற்போது இணையதளத்தில் ஒரு ரீல் வைரலாகி வருகிறது.
ஜூலை 16, புதுடெல்லி (New Delhi): இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Reels) மோகம் இன்றைய 2கே கிட்ஸ்களை பாடாய் படுத்துகிறது.. வெறும் லைக் மற்றும் ஷேருக்காக வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். யூடியூப்பில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம். பேஸ்புக்கில் வீடியோ போட்டால் காசு சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் ரீல்ஸ் போட்டு பாலோயர்களை ஏற்றி சீக்கிரமாக பணக்காரன் ஆக வேண்டும் என்று இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகிறார்கள். அதேநேரம் சிலர் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்து இன்று அதை முழுநேர வேலையாக செய்கிறார்கள். TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
மேலும் திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்வுகளின் பொழுது திருமண தம்பதிகள் ஆடி ரீல்ஸ் எடுத்து போடுவது ஒரு சமூக கலாச்சாரமாகவே மாறி உள்ளது. தற்போது அதில் ஒரு படி மேல் சென்று பெண் பார்க்க வரும் சடங்கினைக் கூட ரீல் எடுக்கின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் அது பெண் பார்க்க வந்த நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்டதா அல்லது லைக்கிற்காக நடித்து எடுக்கப்பட்ட வீடியோவா என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Jul 16, 2024 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

