மார்ச் 18, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் & யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரூ.350 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஆதி நாராயணா மற்றும் மதன் கார்க்கி வசனத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. 6 விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம் உட்பட 38 மொழிகளில் உலகளவில் வெளியாகிறது. வெளியீடுக்கு முன்னதாகவே இப்படம் ரூ.500 கோடி வருமானத்தையும் ஈட்டி இருக்கிறது. இந்நிலையில், கங்குவா திரைப்படத்தின் டீசர் காட்சிகள் நாளை (மார்ச் 19) மாலை 04:30 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Dell Limitations For WFH Employees: "வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு இல்லை" - மெமோ கொடுத்து ஊழியர்களிடம் அதிரடி காண்பித்த டெல்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)