Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..!

இயக்குனர் வெங்கட் பிரபு - நடிகர் விஜய் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை 600028, மங்காத்தா, மாநாடு என வெற்றிப்படங்களை கொடுத்தவர், விஜயுடன் இணைந்துள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Thalapathy 68 Update: இன்று மாலை வெளியாகிறது தளபதி 68 படத்தின் முக்கிய அப்டேட்; விபரம் உள்ளே..!
Thalapathy 69 Update Poster Actor Vijay (Photo Credit: @vp_offl Wikipedia)

டிசம்பர் 31, சென்னை (Chennai): வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சிநேகா, லைலா, மீனாட்சி சௌதாரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அஜ்மீர், யோகிபாபு, வைபவ் ரெட்டி, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ் உட்பட பலரும் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68 (Thalapathy 68 Movie). இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது, இசையமைப்பு பணிகளை யுவன் சங்கர் ராஜா மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று (31 டிசம்பர் 2023) படத்தின் முதல் பார்வை மாலை 6 மணியளவில் வெளியாகிறது. இந்த முதற்பார்வை போஸ்டருடன் படத்தின் தலைப்பு வெளியாகலாம் என எதிர்க்கபார்க்கப்டுகிறது.

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 31, 2023 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).