செப்டம்பர் 13, லண்டன் (Cinema News): இங்கிலாந்து, லண்டனில் (London) உள்ள கல்லூரியில் நடிகை ராதிகா சரத்குமாரின் (Actress Raadhika Sarathkumar) மகன் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக ராதிகா அடிக்கடி லண்டன் செல்வது வழக்கம். அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றபோது, விமானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை (Virat Kohli) சந்தித்துள்ளார். அப்போது, விராட் கோலியுடன் நடிகை ராதிகா புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது, அந்த புகைப்படத்தைத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், லண்டனிலிருந்து சென்னை திரும்பும் போது விராட் கோலியை எதிர்பாராதவிதமாகச் சந்தித்தேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகப் பதிவிட்டுள்ளார். Thalapathy 69: "என் பிள்ளை தளபதிய பார்க்கணும் சொன்னா என்ன செய்வேன்?" சோகத்தில் கதறும் ரசிகர்கள்..!

நடிகை ராதிகா சரத்குமார் விராட் கோலியை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)