Pushpa 2 Second Single: புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் 2ம் பாகத்தில், இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகிறது.

Pushpa 2 Second Single: புஷ்பா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு: படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Pushpa 2 Second Single (Photo Credit: @MythriOfficial X)

மே 22, சென்னை (Cinema News): கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில் ரெட்டி, ஜெகதீஷ் பிரதாப், ரஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலரும் நடித்து வெளியான திரைப்படம் புஷ்பா (Pushpa: The Rise Part 1). தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் நடைபெறும் செம்மரக்கடத்தல், அதுசார்ந்த ரவுடியிசம் மற்றும் அரசியலை பின்னணியாக கொண்டு படம் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. அதற்கான ஏற்பாடுகளை படக்குழு செய்திருந்தது. படத்தின் புஷ்பா புஷ்பா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது காதல் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகுவதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. Vaikasi Visakam 2024: இன்று முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளம், அரோகரா கோஷத்தால் களைகட்டும் திருச்செந்தூர்..! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 22, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).