செப்டம்பர் 09, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்தின் ‘மனசிலாயோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலின் சிறப்பம்சமாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Jayam Ravi - Aarthi Divorce: 15 வருட திருமண வாழ்க்கைக்கு முடிவு.. ஜெயம் ரவிக்கு விவாகரத்து.. இதுதான் காரணமா?!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)