Fast X Trailer: உலகமே எதிர்பார்த்த Fast X படத்தின் அசத்தல் டிரைலர் உள்ளே.. குடும்பத்தை காப்பாற்ற மீண்டும் ரேஸை கையில் எடுத்த வின் டீசல்.!
Fast & Furious படத்தின் 5 பாகத்தில் வில்லனான கதாபாத்திரம், 10ம் பாகத்தில் டொரேண்டோவை பழிவாங்க துடிக்க, அவனின் பிடியில் இருந்து குடும்பத்தை எப்படி அதிரடியோடு காப்பாற்றுகிறார் என்பதே Fast X படத்தின் கதையாக இருக்க போகிறது என்பது உறுதியாகியுள்ளது.
பிப்ரவரி 10: லூயிஸ் லெட்டரியர் (Louis Leterrier) இயக்கத்தில், ரூ.340 கோடி பட்ஜெட்டில், நடிகர்கள் வின் டீசல் (Vin Diesel @ Dominic Toretto), ஜேசன் ஸ்டாதம், மைக்கேல் ரோட்ரிக்ஸ், டைரஸ் கிப்சன், கிறிஸ் லுடாக்ரிஸ் பிரிட்ஜ், ஜான் ஸீனா (John Cena), சுங் காங், மைக்கேல் ரூக்கர், ஜேசன் மோமோவா (Jason Momoa) உட்பட பலர் நடித்து 19 மே 2023 அன்று திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ள திரைப்படம் பாஸ்ட் எக்ஸ் (Fast X). பாஸ்ட் & பியூரியஸ் (Fast & Furious) படத்தின் தொடர்ச்சியாக 10ம் பாகம் தயாராகியுள்ள நிலையில், 5ம் பாகத்தின் (Fast Five) காட்சிகளில் முன்விரோதம் எடுக்கும் வில்லனின் செயல்பாடுகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. படத்தில் மறைந்த நடிகர் பால் வால்கரும் (Paul Walker @ Brian O'Conner) காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். Leo Update: காஷ்மீரில் முகாமிட்டுள்ள விஜயின் லியோ படக்குழு.. அசத்தல் போட்டோவை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்..!
Trailer Here
5ம் பாகத்தில் டொரெண்டோ வைத்த பகை 10ம் பாகத்தில் வில்லனாய் 9 மே 2023-ல் களமிறங்குகிறது.. அதே பரபரப்புடன் Fast X Trailer Out Now 🔥
Trailer Link: https://t.co/OzONiArRSf #FastXTrailer | #FASTX | #PaulWalker | #VinDiesel | #DominicToretto | #JohnCena | #FastAndFurious pic.twitter.com/pnc1Fa8RX2
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 10, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 10, 2023 11:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

