KPY Bala And Lawrence Helping People: மீண்டும் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் லாரன்ஸ் கைகோர்ப்பு.. பெண்ணின் ஆட்டோ வாங்க வாங்கிய கடன்கள் அடைப்பு..!
கேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் இணைந்து பெண்கள் குழுவாக நடத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கட்டியுள்ளார்கள்.
மே 07, சென்னை (Cinema News): குக் வித் கோமாளி (CWC) என்ற டிவி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவு பிரபலமான நடிகர் பாலா (KPY Bala) தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோவில், இவரும் நடிகர் லாரன்ஸ் (Lawrence) சேர்ந்து கஷ்டப்படும் ஏழை பெண்ணிற்கு ஆட்டோவை வாங்கி கொடுத்துள்ளனர். அப்பொழுதே அந்த செய்தி வைரலாக பரவியது. புதிதாக ஆட்டோ வாங்கிய பெண் அவர்கள் பகுதியில் இருக்கும் பெண்களால் நடத்தப்படும் ஆட்டோ சங்கத்தில் இணைந்து ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் இஎம்ஐ செலுத்த கஷ்டப்பட்டு வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் கஷ்டத்தை போக்க அவர்களது ஆட்டோ கடன்களை எல்லாம் கேபிஒய் பாலா மற்றும் நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் கட்டியுள்ளார்கள். இதை கேபிஒய் பாலா வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் 10 பேரின் ஆட்டோ கடனை முழுமையாக அடைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். Shakib Al Hasan Almost Slaps Groundsman: செல்ஃபி எடுக்க வந்தவர்க்கு அடி.. ஷாகிப் அல் ஹசனின் அத்துமீறிய நடவடிக்கை.. வைரலாகும் வீடியோ..!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2024 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

