Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் - கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.!

கோமாளிகளோடு அட்ராசிட்டி செய்து சாதுர்யமாக சமைக்கும் குக்குகளின் காமெடி ஷோ குக் வித் கோமாளி 4ம் சீசன் ஜனவரி 28 ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் - கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.!
Cook With Comali Season 4 (Photo Credit: Vijay Television)

ஜனவரி 26: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் (Vijay Television) ஒளிபரப்பாகி, தமிழக மக்களை கொரோனா (Corona Lockdown) காலகட்டத்தில் சிரிக்க வைத்து, அவர்களை ஊரடங்கு மன அழுத்தத்தில் இருந்து விடுவித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி (Cook With Comali). இந்த நிகழ்ச்சிக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல் சீசனில் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar), இரண்டாவது சீசனில் கனி திரு (Kani Thiru), மூன்றாவது சீசனில் சுருதி அர்ஜுன் (Shuruthi Arjun) ஆகியோர் வெற்றி அடைந்தனர். இவர்களில் வனிதாவுக்கு ரூ.3 இலட்சமும், பிற இருவருக்கும் ரூ.10 இலட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் (Cook With Comali Season 4) படப்பிடிப்புகள் நடைபேற்று வந்த நிலையில், ஜனவரி 28ம் தேதி முதல் வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இரவு 09:30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. Instagram Biker: நடுரோட்டில் ஆபத்தான வகையில் சாகசம் செய்த இளைஞருக்கு வலைவீசிய காவல்துறை.. இன்ஸ்டா பதிவை போலீசுக்கு பார்வேட் செய்த சமூக ஆர்வலர்.

சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..

Fun வேணுமா Fun இருக்கு.. 😍

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).