ஜனவரி 27, புளியந்தோப்பு: சென்னையில் உள்ள புளியந்தோப்பில் (Pulianthope, Chennai) வசித்து வருபவர் ரமேஷ் (Dancer Ramesh) (வயது 49). இவர் நடன கலைஞர் ஆவார். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் (Zee Tamil Television) நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். முதலில் சாலையோரம் நடனமாடி வீடியோ பதிவிட்டு வந்த ரமேஷை சின்னத்திரையில் அறிமுகம் செய்து வரவேற்றது ஜீ தமிழ் (Zee Tamil Dance Show) என்பதால், அவர் ஜீ தமிழ் ரமேஷாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரின் 2 மனைவிகளிடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஒருவர் தரப்பு அவரை கடத்தி சென்று தாக்கியதாகவும் கூறப்பட்டது. இவர் சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு இல்லத்தில் வசித்து வந்த ரமேஷ், 10வது மாடியில் (Dancer Ramesh Suicide) இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Pathaan 2 Days Collection: 2 நாட்களில் ரூ.219 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்ற பதான்.. பாலிவுட்டின் நாயகனாக கர்ஜிக்கும் ஷாருக்கான்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)