ஆகஸ்ட் 20, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவின் (Bengaluru) மிக நீளமான மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்ற எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic City Flyover), வேகமாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிடச் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. PM Modi To Visit Ukraine and Poland: இந்திய பிரதமர் மோடி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம்.. போர் விவகாரம் குறித்தா?!

இச்சம்பவம் நேற்று (ஆகஸ்ட் 19) மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் அருகில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியது. அருகில் இருந்த மற்றொரு கார் மீது ஆம்புலன்ஸ் மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இதன் வீடியோ காட்சி முன்னால் சென்ற காரின் டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மேம்பாலத்தில் சென்று சோதனை செய்தனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)